Thursday, August 14, 2008

நண்பன்





நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம், நல்ல நண்பர்கள் கிடைத்தாலும் அதைத் தக்க வைப்பதும் ஒரு கடினமானதாகத்தான் இருக்கிறது. நட்பைப் பற்றிப் பல பேர் சொல்லிருந்தாலும் , அதைப் பற்றி நாம் ஆழமாக நாம் அறிந்திருந்தாலும் என்னுடைய உணர்வையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

முதலில் நண்பர்கள் எப்படிக் கிடைக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். சில ஒத்த கருத்துடையவர்கள் ,சில ஒத்த சிந்தனை அல்லது எண்ணமுடையவர்களாய் இருப்பவர்கள் ஒன்று சேருவது அல்லது ஒருவருடைய செயல்கள் அல்லது ஒருவருடைய கருத்துகள் நமக்கு ஆறுதலைத் தரும் என்றால் அவர்களை நாம் நண்பர்களாய் ஏற்றுக் கொள்வோம். நம்முடைய உணர்வுகளுக்கு யார் மதிப்பு கொடுக்கின்றார்களோ ,நம்முடைய முன்னேற்றத்திற்கு யார் உந்துதல் கொடுக்கின்றார்களோ அல்லது நம்முடைய உணர்ச்சிகளுக்கு யார் வடிகாலாய் திகழ்கின்றார்களோ அவர்களை நண்பர்களாய் ஏற்றுக்கொள்வோம்.இந்த காரணங்கள் ஒத்து வந்தால் அவர்கள் இயற்கையாகவே நண்பர்களாகிவிடுவார்கள்.

ஒரு சிலர் எதிர்பார்த்து நண்பர்களைக் தேர்ந்துஎடுப்பார்கள். அல்லது நண்பர்களாய் ஆன பிறகு எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்பார்கள் வரும்பொழுதுதான் நண்பர்களுக்கு இடையே பிரச்சனை ஆரம்பிக்கிறது. எதிர்பார்ப்பு என்பது பலவிதங்களில் இருக்கலாம்.
நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் எல்லாரிடமும் எல்லாமும் எதிர்பார்க்க முடியாது. நாம் இவனிடம் இது கேட்டால் நடக்கும் என்று எதிர்பார்த்து அவனிடம் கேட்கும் பொழுது அவனால் முடியாது என்று சொல்லிவிட்டால், அல்லது நாம் எதிர்பார்த்துக் கிடைக்காவிட்டால் நமக்குள் அந்த நண்பன் மீது சில வெறுப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது அந்த வெறுப்பு அவன் நமக்கு முன்னால் செய்த நன்மைகள் அனைத்தையும் மறைத்து விடுகிறது.

அந்த எதிபார்ப்பு என்ன?. நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் எல்லாரிடமும் எல்லாமும் சொல்லிவிடமுடியாது . ஒரு சிலர் மிக நெருங்கிய நண்பர்களாய் இருப்பார்கள் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமான குணாதிசியங்கள் இருக்கும்.
அவர்களிடம் நமக்கு நம்முடைய நடைமுறையில் உள்ள சில பிரச்சினைகள் அல்லது மகிழ்வான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். நமக்கு பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் மூலம் ஒரு தீர்வு கான முயல்வோம். நமக்கு எதாவது ஒரு விஷயத்தில் குழப்பங்கள் இருந்தால் அவர்களிடம் ஆலோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வருவோம். நமக்கு நம் குடும்பத்தாரிடம் இருந்தோ அல்லது நமக்கு மிகவும் வேண்டியவர்களிடம் இருந்தோ நமக்கு ஒரு பிரச்சினை வந்தாலோ அல்லது நம்மால் அவர்களுக்குப் பிரச்சனை வந்தாலோ நம்முடைய நண்பர்களிடம் சொல்லி அவர்களிடம் இருந்து சில ஆறுதலான வார்த்தைகளை எதிபார்போம். அந்த நேரம் அவர்கள் நம்முடைய பேச்சுக்கு மதிப்பு தரவில்லை என்றால் நமக்கு அவர்கள் மீது கொஞ்சம் அதிகமாகவே கோபம் வரும்.
ஒர் உண்மையான நண்பனை நாம் அப்போது கண்டு கொள்ளலாம். ஆனால் நம்முடைய பிரச்சினை நியாமானதாக இருக்க வேண்டும் அல்லது நாம் தெரியாமல் அந்த தவறைச் செய்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் நம் மனம் நம்முடைய பிரச்சினைகளை யாரிடமாவது சொல்லி மனது சிறிது ஆற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து நம்முடைய நெருங்கிய நண்பனை அணுகும்போது அவனிடம் இருந்து சரியான அல்லது நமக்கு ஆறுதல் தரக்கூடிய எதாவதுக கிடைக்கவில்லை என்றால் நமக்கு அவர்கள் மீது வெறுப்பு வர ஆரம்பிக்கும். நாம் இந்த நேரத்தில் நம்முடைய நண்பன் எந்த நிலையில் இருக்கிறான் என்பது நமக்குத் தெரியாது நமக்கு நம்முடைய பிரச்சினைதான் பெரியதாகத் தெரியும். ஆனால் நம்முடைய நினைப்பு நமக்கு இந்த முக்கியமான பிரச்சனை உள்ள நேரத்தில் இவன் நமக்கு உதவி செய்யவில்லையே அப்படிஎன்றால் இவனுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நமது மனம் சொல்கிறது.
இதனால் நட்பு பிரிவதற்கு வாய்ப்புகள் வருகின்றன. இதன் பிறகு நாம் மீண்டும் அந்த நண்பனைச் சந்திக்க அல்லது பேச வாய்ப்பு கொடுக்கப் படவில்லை என்றாலோ முற்றிலும் பிரிவதற்கு வாய்ப்பாக அமைகிறது.

நாம் நட்பைப் பற்றி அனேக விளக்கங்களை மற்றும் எடுத்துக்காட்டுகளை இலக்கியங்களிருந்தும், வரலாற்று நிகழ்வுகளிருந்தும் தெரிந்திருக்கலாம். ஆனால் என்னதான் நாம் தெரிந்திருந்தாலும், அறிந்திருந்தாலும் ஒரு சில சிறிய காரணங்களுக்காக நட்ப்புகள் பிரிந்து கிடக்கின்றன. ஒரு சில புதிய நட்புகளால் பழைய நட்புகள் புதுப்பிக்கப் படாமல் அப்படியே விட்டுவிடப் படுகிறது. சில நட்புகள் நம் தரம் உயர்ந்த பிறகு நம்முடைய நண்பனின் தகுதி குறைந்து இருந்தால் அப்படியே தொடர்பைக் குறைத்துக் கொள்கிறோம்.
நம்முடைய நண்பர்களிடம் எது பிடிக்கவில்லையோ, எதனால் நம் மனது நம் நண்பனிடம் பேச மறுக்க வைக்கிறதோ அதைப் பற்றி அடுத்தவர்களிடம் விமர்ச்சிக்காமல் அவனிடம் நேரடியாக சென்று பேசிப் பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம். நாம் எப்போது சந்திக்க பேச மறுக்கின்றோமோ அந்தச் சிறிய இடைவெளி மிக பெரியப் பிரிவை உருவாக்கி விடுகிறது. இந்த சிறிய இடைவெளிதான் மிகப்பெரிய மனிதர்களின் நட்பை எல்லாம் சந்தர்ப்ப வாதிகளை கொண்டு இழந்திருக்கிறது . இந்த சிறிய இடைவெளியால் நண்பர்களின் குடும்பம் பிரிகிறது ,கட்சிகள் பிரிந்து இருக்கின்றன ஏன் நாடுகளே பிரிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தச் சிறிய இடைவெளி கூட இல்லாமல் பார்த்து கொள்ளவோம். நட்பின் சிகரங்களாக திகழ்வோம். நட்பு என்பது கூட ஓர் அன்பின் பரிமாணம்தான் , அந்த அன்பில் மகிழ்ந்து என்றும் மகிழ்வுடன் வாழ்வோம்.

4 comments:

  1. great na...............

    ReplyDelete
  2. நல்ல ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடு... நல்லா எழுதுறீங்க... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Good post, Dominic!

    Mohan

    ReplyDelete