Tuesday, October 14, 2008

நம்பிக்கையுடன் முயல்வோம்


ஆற்றின் வெள்ளத்தில்
அடித்து செல்லப்படும்
உயிரற்ற துரும்பாக இல்லாமல்
எதிர் நீச்சல் போடும் மீன்களாய் இருப்போம்.

காற்றோடு காற்றாக
காற்றின் திசை நோக்கி
செல்லும் தூசியாக இல்லாமல்
கிழித்துக் கொண்டு செல்லும் பறவையாக இருப்போம்.

புத்துணர்வில்
பாறையைக் குடைந்து கொண்டு
வேர் பதித்துள்ள பசுமையான மரங்கள் போலவும்.
மண்ணை முட்டி முளைத்துக் கொண்டு வரும்
முளைப்பயிர் போலவும் இருப்போம்.

முயற்சியில்
நிலவின் குளுமை போல இல்லாமல்
சூரியனின் வெப்பமாய் இருப்போம்.

நம்பிக்கையில்
மங்கிப்போன மாலைப்பொழுது போல் இல்லாமல்
பிரகாசமான காலைப்பொழுது போல் இருப்போம்.

உணர்வுக்கு உரமூட்டுவோம்
நம்பிக்கையுடன் முயல்வோம்
வெற்றிபெறுவோம்!

3 comments:

  1. Anbu Thambi
    Your words will touch those who find their lives difficult. May you be the instrument of encouragement to others.
    God bless you.

    ReplyDelete
  2. Dominic...
    Impressive work...
    Keep posting such nice things....

    Viln

    ReplyDelete