அமைதியாக பாயும் நதி போல்
சென்ற வாழ்க்கையில் - ஒரு
பெண்ணை சந்தித்ததும்
பள்ளம் நோக்கி போகும்
நதி போல சலனம்
பேதையை சீண்டியதும்
பெற்றோரை மறந்து
குடும்பத்தை மறந்து
லட்சியத்தை மறந்து
உழைப்பை மறந்து
கல்வியை மறந்து
தன்னிலை மறந்து
நரகத்தையும் சொர்க்கமென நினைக்கவைக்கும் போதை
போதையின் மயக்கத்தால்
பேதைக்காக உயிரையும் துறக்க தோன்றுகிறது
உயிரின் மதிப்பும் வாழ்க்கையின்
மறுபக்கமும் தெரியாமல்
மேதையாக உருவாக்க பெற்றோர்கள் நினைத்தார்கள்
பேதையின் மீதுள்ள போதையால் மூடனானேன்
மது தரும் போதையை விட
மாது தரும் போதை கொடுமையானது
காதல் தரும் இன்பத்தை விட
காதல் தரும் வலி கொடுமையானது
காதல் கண்ணை மறைத்து - ஒரு
கற்பனையான உலகத்தில் மிதக்கவைக்கும் - போதை
No comments:
Post a Comment