மத தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
மனித நேயம் பிறந்திருக்கும்
கோவில்களுக்காக கூடிய கூட்டம்
கல்விக்காக கூடியிருந்தால் - இன்று
கருத்து பிறந்திருக்கும்
கடவுளுக்காக கூடிய கூட்டம்
காயபட்டவர்களுக்காக கூடியிருந்தால் - இன்று
கருணை பிறந்திருக்கும்
சாமியார்களுக்காக கூடிய கூட்டம்
சாமானிய மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
சமதர்மம் பிறந்திருக்கும்
சாதி தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
சமூகத்திற்காக கூடியிருந்தால் - இன்று
சமத்துவம் பிறந்திருக்கும்
நடிகர்களுக்காக கூடிய கூட்டம்
நாட்டுக்காக கூடியிருந்தால் - இன்று
நன்மை பிறந்திருக்கும்
பணத்திற்காக கூடிய கூட்டம்
படிப்பதற்கு கூடியிருந்தால் - இன்று
பண்பு பிறந்திருக்கும்
சிலைகளுக்காக கூடிய கூட்டம்
சீரமைப்புகளுக்கு கூடியிருந்தால் - இன்று
சுத்தம் பிறந்திருக்கும்
கேளிக்கைகளுக்காக கூடிய கூட்டம்
கேள்வி கேட்ட்க கூடியிருந்தால் - இன்று
கடமை பிறந்திருக்கும்
அரசியல்வாதிகளுக்காக கூடிய கூட்டம்
அன்புக்கு கூடியிருந்தால் - இன்று
அமைதி பிறந்திருக்கும்
தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
தன்மானத்திற்காக கூடியிருந்தால் - இன்று
தமிழ் ஈழம் பிறந்திருக்கும்
அருமை அருமை
ReplyDeleteநீங்கள் சொல்லிச் செல்லும் இருந்தால்கள்
நடந்திருந்தால் நிச்சயம் நம்வாழ்வும்
சிறந்துதான் இருந்திருக்கும்
வித்தியாசமான அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கு என்னுடைய நன்றிகள் அய்யா
ReplyDelete