கருணை பொறுமை என்ற
நன்மைகளை - கூட்டினேன் (+)
பொறாமை வஞ்சகம் என்ற
தீய பழக்கத்தை - கழித்தேன் (-)
கல்வி தொண்டு என்ற
இலட்சியங்களை - பெருக்கினேன் (*)
பகிர்வு நேர்மை என்ற
நல்லொழுக்கத்தை - வகுத்தேன்(/)
வெற்றி தோல்வி என்ற
நிகழ்வுகளை ஏற்றுகொண்டேன் - சமமாக(=)
வாழ்க்கை கணக்கினை பிழையில்லாமல் தீர்த்திட
அன்பு என்னும் சூத்திரம் செய்து
கணக்கில்லா வளர்ச்சியை பெற்றிட்டேன்!
எண் மூலம் வாழ்வைக் கணித்த
ReplyDeleteஎண் கணிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
பின்னூட்டப் பெட்டியில்
வேர்ட் வெரிஃபிகேஷனை நீக்கவும்
தங்கள் வாழ்த்துக்கு என்னுடைய நன்றிகள் அய்யா
Deleteஇந்த கணக்கு புதுசா இருக்கே...நல்ல சிந்தனை...
ReplyDelete