Wednesday, October 28, 2009

நம்முடைய உறவுகள் எப்படி இருக்கின்றன?


முந்தைய காலத்தில் உடைந்த வீடுகளிலும் , ஓலைக் குடிசையிலும் வாழ்ந்தவர்களின் , குடும்ப உறவுகளும் , கணவன் மனைவி உறவுகளும் உடையாமலும் , மிகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் இன்று பங்களாவிலும் , பெரிய வீடுகளில் வாழுபவர்களின் எல்லாவிதமான உறவுகளும் உடைந்தும் , சிதறியும் கிடக்கின்றன.

உறவு என்றால் என்ன? அதை எப்படி புரிந்து கொண்டால் உறவுகள்ப் பிளவு படாமல் பார்த்துக் கொள்ளலாம். உறவு என்பது நம் தாய் , தந்தை , தந்தையின் உடன் பிறந்தவர்கள் அல்லது தாயின் உடன் பிறந்தவர்கள் மட்டும் அல்ல. நட்பும் ஓர் உறவுதான் , நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்துத் தரப்பினரும் நமக்கு மனிதன் என்ற உறவுதான்.

உறவு ஏன் உடைகிறது? அதிகம் கல்வி அறிவு இல்லாத காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எப்படி ஒரே கூட்டுக் குடும்பமாக பல ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு அந்த உறவின் அறிவைச் சொல்லிக் கொடுத்தது யார். அவர்களை அழைத்து வந்து நாம் இந்த உறவு முறையை பற்றி கேட்டால், நாம் இவன் படிக்காதவன் இவனுக்கு என்ன தெரியும் என்று சொல்லிவிடுவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு வீட்டில் இருந்தாலும் தனி , தனி அறைகளில்தான் தீவு போல வாழ்ந்து வருகின்றோம். ஒருவேளை நமது உறவுகளின் பலம் இல்லாமல் போனதிற்கு நாம் கல்வி கற்றது காரணமாக இருக்குமோ அல்லது மிகவும் முற்போக்குத்தனமாக சிந்திப்பது காரணமாக இருக்குமோ?.

உறவுகளை எப்படி பலப்படுத்தலாம்? உறவுகள் நம்மை எப்படி மகிழ்ச்சியாக வாழ வைப்பார்கள் அல்லது எப்படி நாம் அவர்களாள் பயனடையப் போகிறோம் என்பதை விட நாம் நம்முடைய உறவுகளை எப்படி மகிழ்ச்சியாக வாழ வைக்கபோகிறோம் அல்லது நம்மால் அவர்கள் எப்படி பயனடைய போகிறார்கள் என்ற உண்மையான உணர்வுடன் உறவைப் போற்றி வளர்த்தால் நம்முடைய உறவுகள் ஆழமாகவும் நீண்ட காலமும் இருக்கும். நம் உறவுகளிடையே உள்ள மனக் கசப்புகளை மறப்போம் , வீணான தலைக்கனங்களைக் கைவிடுவோம். உறவுகளை போற்றுவோம் மற்றும் நம்முடைய உறவுகளுக்கு உரமிடுவோம், பழைய உறவுகளைப் புதுமைப் படுத்துவோம் . உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்போம். உறவுகளைப் போற்றுவோம்.

2 comments:

  1. வணக்கம் பன்னீர் செல்வம்

    \\முந்தைய காலத்தில் உடைந்த வீடுகளிலும் , ஓலை குடிசையிலும் வாழ்ந்தவர்களின் , குடும்ப உறவுகளும் , கணவன் மனைவி உறவுகளும் உடையாமலும் , மிகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது.\\

    இதில் மாறுபடுகின்றேன் -- இவ்வாறான பெதுப்படையான வார்த்தைகள் சரியாக இருப்பதில்லை.

    நீங்கள் குறிப்பிட்ட முந்தைய காலத்தில் பெண்கள் அடுப்படியை விட்டு வெளிவர அனுமதிக்கப்படாதவர்களாகவே இருந்துள்ளனர் நம் தாத்தா காலத்தில் பெரும்பாலும் 2 மனைவிகளுடன் இருந்தனர் மனதில் கை வைத்து சிந்தித்து பாருங்கள் எந்தப்பெண்னாவது தனக்கு ஒரு சக்களத்தி வருவதை விரும்புவார்களா ...

    அப்போது இருந்தது உறவு இல்லை, அண்டான் அடிமை, பெண்களுக்கு வாழ வேறு வழி இல்லை எல்லாவற்றையும் சகித்தும் பொருத்தும் போவதுதான் வழி

    எப்போதும் ஒரு வழியாகவே இருந்தது அதனால் அப்படி இருந்தது.

    ஒரு இடத்தில் இருந்து எதிர்பு வரவில்லை எனில் அமைதியாக இருக்கின்றனர் எனில் அங்கு எல்லாம் சரியாக இருக்கின்றது என அர்த்தமில்லை, ஒரு சாரார் அடிமைகளாக இருக்கின்றனர் என அர்த்தம்

    மற்றபடி இப்போது ஒரே வீட்டிற்குள் தடித்தனி தீவாக இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

    இராஜராஜன்

    ReplyDelete
  2. ஆழ்ந்து சிந்தித்து எழுதிய நல்ல இடுகை.. வாழ்த்துக்கள் டொமினிக்... உறவுகளை பற்றிய ஒரு சிந்தனை நமக்கு நம் பெற்றோரிடம் இருந்து கிடைக்கவில்லை... சிறிது யோசித்து பாருங்கள் நாம் நமது சிறு வயதில் மெத்த படிக்காத அல்லது வாய்ப்பு வசதிகளில் நமக்கு சமம் இல்லாத எத்தனை உறவினர்களிடம் பழக அனுமதிக்க பட்டோம்? அவர்கள் நமது சொந்த அத்தையோ இல்லை பெரியப்பாவோ அவர்கள் நன்று படித்திருந்தால் அல்லது நல்ல வசதியாக இருந்தால் மட்டுமே நாம் அவர்களுடன் பழக அனுமதிக்க படுகிறோம்... இதனால் நமது உறவினர்களுக்கும் நமது தலைமுறையினருக்கும் தவிர்க்க முடியாத இடைவெளி வந்து விடுகிறது... பிறகு எப்படி உறவுகளை பற்றிய ஒரு நல்ல எண்ணம் நமக்கு இருக்கும்? இன்று நகர்புறங்களில் மட்டும் அல்லாது கிராமங்களிலும் ஒரே வீட்டுக்குள் இருக்கும் அப்பா அம்மா மகன் மகள் அனைவர்க்கும் ஒரு இடைவெளி உள்ளது. இது எதனால் வந்தது என்றல் நிச்சயமாக நம் முந்தைய தலைமுறையினரால் மட்டுமே.... இது யாரால் ஒழிக்க முடியும் என்றல் நிச்சயம் நம் தலைமுறையினரால் மட்டுமே... \\நாம் நம்முடைய உறவுகளை எப்படி மகிழ்ச்சியாக வாழ வைக்கபோகிறோம் அல்லது நம்மால் அவர்கள் எப்படி பயனடைய போகிறார்கள் என்ற உண்மையான உணர்வுடன் உறவை போற்றி வளர்த்தால் நம்முடைய உறவுகள் ஆழமாகவும் நீண்ட காலமும் இருக்கும்\\
    மிக நல்ல வார்த்தை கோர்வைகள் டொமினிக்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete