Wednesday, October 16, 2013

காரணம் - என்னவோ ?


உலக மக்கள் பேச தொடங்குவதற்கு முன்
மொழிக்கு இலக்கணம்  வகுத்த - தமிழ்
இன்று பொலிவிழந்து நிற்க காரணம் - என்னவோ ?

பொறியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில்
மிகப்பெரிய கல்லணை கட்டிய - இடத்தில்
அரசு கட்டடம் உடைந்து போக காரணம் - என்னவோ ?

கட்டட கலைக்கு சான்றாக  ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்  கட்டிய கோவில்கள் கம்பீரமாக நிற்க
எம் மக்கள்  குடிசையில் வாழும் காரணம் - என்னவோ ?

அறிவியல் அறிவு இல்லாத காலத்தில் நவ கிரகங்களை
கண்டுபிடித்த ஞானிகள் பிறந்த மண்ணில் -சுகாதார
சீர் கேடுகள் நிறைந்து கிடக்க காரணம் - என்னவோ ?

பசு கன்றுக்கு நீதி கிடைக்க தன மகனை கொன்ற
மன்னன் வாழ்ந்த நாட்டில் - அரசியல் வாதிகளுக்காக
நீதி விற்கப்பட காரணம் - என்னவோ ?

புலியை முறத்தால் அடித்து  விரட்டிய வீர மக்கள்
வாழும்  ஊரில் ஒலிம்பிக்கில் -ஒரு பதக்கத்திற்காக
ஏங்கி  நிற்கும் காரணம் - என்னவோ ?

போக்குவரத்து இல்லாத நேரத்தில் ரோமாபுரிக்கு
வணிகம் செய்தவர்கள் வாழ்ந்த நாட்டில் -அந்நிய
பொருள்களுக்கு அடிமைப்பட்டு கிடக்க காரணம் - என்னவோ ?

கடல் கடந்து மலை கடந்து வெற்றி பெற்ற
 நாடுகளை வளைத்த வீர மறவர்கள் வாழ்ந்த - நாட்டில்
சொந்த மண்ணில் தோற்ற காரணம் - என்னவோ ?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் மொழியை
எம் மக்கள்  பேச மறுக்க காரணம் - என்னவோ ?

1 comment:

  1. இவை அனைத்திற்கும் விவசாயத்தை ஒரு கேவலமான தொழிலாக மாணவர்களை நினைக்கவைத்த ஆசிரியர்கள்தான் கரணம். நீ சரியாக படிக்கவில்லையெனில் விவசாயம் பார்க்கத்தான் லாயக்கு என மாணவர்களை தவறாக வழிநடத்தியது தான் மாணவர்களை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு உந்தித்தள்ளியது. ஆங்கில புலமை உள்ளவனே சிறந்த மாணவனாக கெளரவிக்கபட்டதுதான் தமிழை உதாசினபடுத்த வைத்தது. நவகிரகத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பார்க்கும் இன்றைய காலத்தில் அதை நமக்கு யார் முதலில் ஆதாரத்துடன் நிருபிதார்களோ அவர்களையே இந்த உலகம் பின்பற்றுகிறது, நம்மை நாம் நிருபிக்க தேவை இல்லை ஏனெனில் நவகிரகத்தை உருவாகியதே நம் தமிழ் முனோர்கள்தான் உருவாகிய ஒருவனுக்குதான் அதன் மாதிரியை அப்படியே செய்யமுடியும் அது கடவுள் என்றால் ஒரு தமிழனே கடவுளாக இருக்கவேண்டும். அந்த தமிழனைத் தேடியே நம் பயணம் அமையவேண்டும் என உங்கள் அனைவரையும் விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகிற்கே திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் எழுதி கொடுத்தது தமிழன்தான் அதில் இருக்கும் அறிவியலை வெளிக்கொண்டுவந்தாலே அத்துனை கேள்விக்கும் விடை கிடைக்கும்.
    அருண்குமார் ....

    ReplyDelete